’காப்பிரைட்’டராக பணியாற்றிய பெண் இறப்பு:
'30 மணிநேரம் தொடர்ந்து வேலை பார்த்ததாக டுவிட்டரில் தகவல்’
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்த பெண் பலியானார்.
இந்தோனேஷியாவில் மிட்டா துரன் என்ற பெண் ’காப்பிரைட்’டராக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவர் நிறுவனத்தில் தொடர்ந்து 30 மணி நேரம் தூக்கம் இன்றி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலையில் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த மற்ற பணியாளர்கள் அவர் இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பலியான மிட்டா துரன் இறப்பதற்கு முன்பாக ”30 மணிநேரமாக வேலை பார்க்கிறேன், தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மிட்டா இறந்ததற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வேலை பார்த்ததே அவரது இறப்பு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வேலை நேரத்தின் போது மிட்டா உலுக்கு ஆற்றலை கொடுக்க குளிர்பானங்களை குடித்து வந்துள்ளார்.
0 comments