மக்காவ் சர்வதேச இந்திய திரைப்பட விழா
வித்யா பாலன், ரன்பீருக்கு சிறந்த நடிகர் விருது
மகாவ், ஜூலை 7:
சீனா மக்காவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. கண்களை கொள்ளை கொண்ட இவ்விழா பச்சான் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஸ்ரீதேவி, பிரபு தேவா, சூசாத் சிங் ராஜ்புத், மாதுரி தீக்சித், தீபிகா படுகோன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பிரபு தேவா ஸ்ரீதேவி இருவரும் நடனம் ஆடினர்.
இதில், பர்பி இந்தி திரைப்படத்தில் செவிடு-ஊமை பையனாக நடித்த ரன்பீர் கபூர் சிறந்த நடிகராகவும்,

கஹானி திரைப்படத்தில் கணவனை தேடும் கற்பிணிப்பெண்ணாக நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும்
தேர்வு செய்யப்பட்டனர்.
நடிகர் அபிஷேக் பச்சன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக்கொண்ட வித்யா பாலன், இந்த விருதை எனது இயக்குனர் சுஜித் சிர்காருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறி நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு ரன்பீர் கபூர் வராததால், அவருக்கான விருதினை அவரது இயக்குனர் அனுராக் பாசு பெற்றுக்கொண்டார். சிறந்த ஜோடிக்கான விருதை ரன்பீரும், தீபிகா படுகோனேயும் தட்டிச்சென்றனர்.
விருதை பெற்றுக்கொண்ட தீபிகா படுகோன், நான் ரன்பீரை மிகவும் நேசிக்கிறேன். அவரை இங்கு மிஸ் பன்னுகிறேன். மிகவும் வருத்தமாய் இருக்கிறது என்று கூறினார்.

0 comments