டைரக்டர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு:
நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக வேண்டும் - கோர்ட்டு உத்தரவு
எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி டைரக்டர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். அதற்கு டைரக்டர் களஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
0 comments