31 October 2013

வெற்றி களிப்புடன் உள்ளூர் போட்டிகளிலிருந்து விடை பெற்றார் சச்சின்

வெற்றி களிப்புடன்
உள்ளூர் போட்டிகளிலிருந்து விடை பெற்றார் சச்சின்
 

லாலி: 

            வெற்றிக் களிப்புடன் உள்ளூர் போட்டிகளில் இருந்து, இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் விடை பெற்றார். ஒரு நாள் போட்டியில் இருந்து விடைபெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கர், அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடை பெறுகிறார். 

இந்நிலையில், அரியானாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினார். இந்த போட்டியுடன், உள்ளூர் போட்டிகளிலும் விடை பெறப்போவதாக அவர் அறிவித்திருந்தார். அரியானா , மும்பை அணிகள் மோதிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட், அரியானாவில் உள்ள ரோடக்கின் லாலி மைதானத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. 

டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய, அரியானா அணி 35.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக சர்மா 49 ரன் எடுத்தார். 

இதையடுத்து, மும்பை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சச்சின் 5 ரன்னில், சர்மாவின் பந்தில் போல்டானார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. மும்பை அணி 62 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன் எடுத்தது. ரஹானே மட்டும் அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார். 

2வது இன்னிங்சில், அரியானா அணி 241 ரன் எடுத்தது. அடுத்ததாக மும்பை அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3ம் நாளான நேற்று முன்தினம், இந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்திருந்தது. சச்சின் டெண்டுல்கர் 55 ரன்னுடனும், குல்கர்னி 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 

சச்சினும், குல்கர்னியும் சேர்ந்து விறுவிறுவென்று ரன் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். சச்சின் 79 ரன்னும், குல்கர்னி 16 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து, மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியுடன் சச்சின் உள்ளூர் போட்டியில் இருந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரை அணி வீரர்கள் ஒன்று சேர்ந்து தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து, உடைமாற்றும் அறை வரை தூக்கிச் சென்று தங்களுடைய மரியாதையை செலுத்தினர். அவரை அணி வீரர்கள் தூக்கிக் கொண்டு வரும்போது, ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top