31 October 2013

6 வது ஒரு நாள் போட்டி - இந்தியா அபார வெற்றி சர்மா, தவான், கோஹ்லி சரவெடி

6 வது ஒரு நாள் போட்டி - இந்தியா அபார வெற்றி
சர்மா, தவான், கோஹ்லி சரவெடி


நாக்பூர்: 

             ஆறாவது ஒரு நாள் போட்டியில், சர்மா, தவான், கோஹ்லியின் சரவெடி ஆட்டத்தினால், ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்தியா , ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியில், 2,1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. மழை காரணமாக 4 மற்றும் 5வது போட்டிகள் கைவிடப்பட்டன. 

இந்நிலையில், 6வது ஒரு நாள் போட்டி, நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஹூக்ஸ், பின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

இவர்கள் வந்த வேகத்திலேயே முறையே 13, 20 ரன்களில் வெளியேறினர். வாட்சனும், பாய்லேயும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினர். முகமது ஷமி பந்தில் வாட்சன் போல்டானார். அப்போது அவர் 102 ரன் (94 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்தார். பாய்லே அதிரடி ஆட்டத்தின் மூலம், 156 ரன் (114 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். 

பின்வரிசையில் ஓக்ஸ் அவுட் ஆகாமல் 44 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன் எடுத்தது. 

இதையடுத்து, இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். பின்ச் பந்தை தூக்கியடித்து, பால்கெனரிடம் கேட்ச் கொடுத்து சர்மா 79 ரன்னில் வெளியேறினார். 

தவான் 100 ரன்னில் போல்டானார். ரெய்னா 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். யுவராஜ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

கோஹ்லி சரவெடி ஆட்டத்தை விளையாடினார். அவர் 66 பந்தில் 115 ரன் எடுத்தார் (18 பவுண்டரி, ஒரு சிக்சர்). அவருக்கு கைகொடுத்த தோனி 25 ரன் எடுத்தார்.

 49.3 ஓவரிலேயே இந்தியா 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 351 ரன் னை எடுத்தது. 

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலை சமன் செய்தது.

*ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் 50 ரன் அல்லது அதற்குமேல் 2 முறை எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராத் கோஹ்லி நேற்றைய போட்டியில் பெற்றார்.

*நேற்றைய போட்டியில் பாய்லே, வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 100 விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா தொட்டார்.

*ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தது இதுவே முதல் முறை. அவரது ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது 5வது சதம்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top