31 October 2013

நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் - ஜாக்குவார் தங்கம் ஆவேசப்பேச்சு!

நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்
ஜாக்குவார் தங்கம் ஆவேசப்பேச்சு!


 அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ‘‘வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. 

இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல்.நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி’ ஆதிராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய களஞ்சியம், திரையுலகில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உள்ளன. 

ஆனாலும் சிறிய முதலீட்டில் இந்த ‘‘வலியுடன் ஒரு காதல்’’ மாதிரி உருவான எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ திரைப்படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார். இதுபற்றி எத்தனையோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார் கொடுத்து விட்டேன். யாரும் அதைப்பற்றி என்ன ஏது என்று கூப்பிட்டு விசாரிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்‌லை.

ஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந்தமாதிரி சிறிய படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில் இருக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத்தானே இதுமாதிரி சங்கங்கள் உள்ளது. 

ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. தமிழ் சினிமாவில் புதிய சிறு தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக்குறியாகி உள்ளது. அப்புறம் எப்படி சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்‌கள், தமிழ் சினிமா தொழிலாளர்கள் எவ்வாறு பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இதுமாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ வெளிவர வேண்டும் என்று வீராவேசமாக பேசி அமர்ந்தார்.

இதற்கு உடனடியாக அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக ஏற்கனவே பேசி அமர்ந்த ஜாக்குவார் தங்கம், மீண்டும் எழுந்து இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம். 

இந்த பிரச்னைக்கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளில் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார்கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அதுவ‌ரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட்டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம்.

கில்டில் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் எனும் பொறுப்புடன் பேசுகிறேன். 

தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சிறுமுதலீட்டு படங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர், அவரிடம் உங்கள் புகாரை ஒரு முறை அளியுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறியது அரங்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டது.நடிகைகளை செருப்பால் அடிப்போம் என தயாரிப்பாளர்கள் சார்பில் ஜாக்குவார் தங்கம் பேசியதற்கு நடிகர் சங்கத்தின் பதில் என்ன என்பது இனி தான் தெரியவரும்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top