17 June 2013

நாசா : விண்வெளியில், உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறு உள்ள 503 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 


விண்வெளியில், உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறு 


உள்ள 503 புதிய கிரகங்கள்  



விண்வெளியில், உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் உள்ள 503 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

விண்வெளி ஆய்வு மையமான நாசா, பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்கள் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 60 கோடி அமெரிக்க டாலர் செலவில் கெப்லர் என்ற விண்கலத்தை, கடந்த 2009 ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்தியது. 

அந்த விண்கலத்தில் உள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கு கருவி, விண்வெளியில் பல்வேறு ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதில், உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட 503 புதிய கிரகங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த கிரகங்கள் அதற்குரிய நட்சத்திரங்களுக்கு அருகில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. நாசா விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top