26 August 2013

மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கில் 5 குற்றவாளிகளும் பிடிபட்டனர்

மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கில் 
5 குற்றவாளிகளும் பிடிபட்டனர்மும்பை : மும்பையில் பெண் நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர். 

கடந்த வாரம் வியாழக்கிழமை மாலையில், மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த நிலையில் கிடக்கும் சக்தி மில்லை புகைப்படம் எடுக்கச்சென்ற 23 வயது பெண் பத்திரிகையாளர் 5 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக என்.எம்.ஜோஷி மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி சந்த்பாபு சத்தார் ஷேக் (19) என்பவனை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின் பேரில் 2வது குற்றவாளி விஜய் ஜாதவ் மதன்புரா பகுதியில் கைது செய்யப்பட்டான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அக்ரிபாடாவை சேர்ந்த காசிம் பெங்காலியை போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சென்ட்ரலில் வைத்து கைது செய்தனர். இதன் பிறகு அவனுடைய கூட்டாளி சிராஜ் ரகுமான் கான் (24) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டான். இவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

முன்னதாக காசிம் பெங்காலி விசாரணையில் ஒத்துழைக்க மறுப்பதாக கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டபோது அதை படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் போனை அவனும்¢ அவனுடைய கூட்டாளிகளும் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பதை தெரிவிக்கவும் காசிம் பெங்காலி மறுப்பதாக போலீசார் கூறினர். எனினும் பலாத்கார குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 வது குற்றவாளி சலீம் அன்சாரி (27) டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மும்பை குற்றப்பிரிவு போலீஸ் குழு ஒன்று டெல்லி விரைந்தது. 

வடமேற்கு டெல்லி பாரத் நகரில் உறவினர் ஒருவருடைய வீட்டில் ஒளிந்து இருந்த அன்சாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். கைது செய்யப்பட்ட அன்சாரி டெல்லியில் உள்ள ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு மும்பை கொண்டு வரப்பட்டான்.

‘எனது மகள் தைரியமானவள்’

பீர் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தி விடுவதாக மிரட்டி 5 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெல்ட்டால் அவரது கையை கட்டிவைத்து இந்த அட்டூழியத்தை நடத்தியுள்ளனர். நிருபரும் அவரது நண்பரும் தங்களிடம் இருந்த விலை உயர்ந்த கேமரா மற்றும் ஐபோனை தருவதாகவும் தங்களை விட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு குற்றவாளிகள் இரக்கம் காட்டவில்லை. கொடூர சம்பவத்தின் போது, 2 முறை அந்தப் பெண்ணின் செல்போன் அடித்துள்ளது.

2 முறையும் அவரது தாய் பேசியுள்ளார். அப்போது, பிரச்னை எதுவும் இல்லை என்றும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் சொல்லும்படி உடைந்த பாட்டிலை முகத்துக்கு நேராக காட்டி குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். அந்தப் பெண்ணும் அவர்கள் கூறியபடியே, தாயிடம் சொல்லியிருக்கிறார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி, ஆதரவாக இருந்த உங்களுக்கு ரொம்பவும் நன்றி என கூறியிருக்கிறார். எனது மகள் தைரியமானவள். இந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு நலமாக திரும்பி வருவாள் என நிருபரின் தாய் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top