பெங்களூர் நகர தூதராக ரஜினிக்கு அழைப்பு
பெங்களூர்: பெங்களூர் நகர மக்களிடம் சுத்தம் பற்றியும், கழிவுகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடிகர் ரஜினிகாந்தை தூதராக பொறுப்பு ஏற்க கேட்கப்போவதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார். பெங்களூர் நகர மக்களிடம் கழிவு குப்பைகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்தி சுத்தத்தை பேணுவதற்கான பணியில் பெங்களூர் நகர மேயர் சத்யநாராயணா தீவிரம் காட்டி வருகிறார். இவர் ரஜினியின் பள்ளி தோழராக இருந்தவர்.
அவர் கூறியதாவது: பெங்களூரில் உள்ள ஏபிஎஸ் உயர்நிலை பள்ளியில் ரஜினி படித்தபோது அதே பள்ளியில் அவரது ஜுனியராக படித்து வந்தேன். நகரை சுத்தமாக வைப்பதற்கான அறிவுரை வழங்குவதற்கான அமைப்பின் தூராக இருக்க ரஜினியை கேட்க உள்ளேன். இதற்காக விரைவில் சென்னை சென்று அவரை சந்திக்க இருக்கிறேன்.
இதுபற்றி ரஜினி சொன்னால் பெங்களூர் நகர மக்களும், வணிகர்களும் அவரது பேச்சை கேட்டு அதன்படி நடப்பார்கள். மேலும் இதில் இணைந்து பணியாற்ற கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.
0 comments