22 September 2013

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்





ஜெய்ப்பூர், செப்.22:

5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஒட்டாகோ, பெர்த் ஸ்கார்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பிரிஸ்பேன் ஹீட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டைட்டன்ஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் முதலில் மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி வெய்ன் சுமித்தும், சச்சின் தெண்டுல்கரும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பவுண்டரியுடன் ரன் கணக்கை ஆரம்பித்த சுமித் 9 ரன்னில், விக்ரம்ஜீத் மாலிக்கின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஜேம்ஸ் பவுல்க்னெரின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி ஓட விட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தெண்டுல்கர் 15 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி) விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து தினேஷ் கார்த்திக் (2 ரன்) மற்றும் அம்பத்தி ராயுடு (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 53 ரன்களே எடுத்து மும்பை தடுமாறியது. பின்னர் கேப்டன் ரோகித் ஷர்மாவும், கீரன் பொல்லார்ட்டும் கணிசமான பங்களிப்பை அளித்து மும்பை அணி சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர்.


வாட்சனின் ஓவர்களில் 2 சிக்சர்களை பறக்க விட்ட ரோகித் ஷர்மா 44 ரன்களில் (37 பந்து), அவரது பந்து வீச்சிலேயே விக்கெட்டை இழந்தார். பொல்லார்ட் 42 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விக்ரம்ஜீத் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 143 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் டிராவிட் (1 ரன்) ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் ரஹானேவும் (33 ரன்), விக்கெட் கீப்பர் சாம்சனும் (54 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்த போதிலும் ஷேன் வாட்சனும்(27), ஸ்டூவர்ட் பின்னியும் (27 ரன்) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top