முத்தரப்பு கிரிக்கெட்
இறுதி போட்டியில் இலங்கையை வென்றது இந்தியா
இறுதி போட்டியில் இலங்கையை வென்றது இந்தியா
போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை 12:
இந்தியா,
இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் நடந்தன. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில்
இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தேறின. வெஸ்ட் இண்டீஸ் அணி
இப்போட்டியில் இருந்து வெளியேறியது.
கோப்பை யாருக்கு என்பதை
நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
டாசில் வெற்றி பெற்ற இந்தியா, இலங்கை அணியினை முதலில் பேட் செய்ய அழைத்தது.
அதன்படி ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
தரங்காவும், ஜெயவர்த்தனேவும் களமிறங்கினர்.
தரங்கா 11 ரன்களுக்கும்,
ஜெயவர்த்தனே 22 ரன்களுக்கும் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சுக்கு
அவுட்டாக்கி வெளியேறினர். அதன்பிறகு களமிறங்கிய சங்கக்கரா, திரிமன்னே ஜோடி
சிறப்பாக விளையாடி முறையே 71, 46 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
அதன்பிறகு
விளையாடி வீரர்கள் சிறப்பாக விளையாடாததால், 48.5 ஓவரில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதில் புவனேஸ் குமார் 4
விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சர்மாவும், தவானும்
களமிறங்கினர். சர்மா 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெராத் பந்துவீச்சில்
வீழ்ந்தார். தவான் 16 ரன்களுக்கும், விராட் கோலி 2 ரன்களுக்கும் ஆட்டத்தை
விட்டு வெளியேறினர்.
கார்த்திக், ரெய்னா இருவரும் முறையே 23, 32 என்ற
சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனை தொடர்ந்து விளையாடிய மற்றவர்கள்
மிகச்சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். டோனி மட்டும் நிதானமாக
விளையாடி கடைசி ஓவரில் சிக்சரும், பவுண்ட்ரியும் விளாசி இந்தியாவின்
வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியாக 203 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்
வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை
தட்டிச்சென்றது. சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்த டோனி ஆட்டநாயகனாக
தேர்வு செய்யப்பட்டார்.
0 comments