6 September 2013

தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் நீக்கம்

தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் நீக்கம்


சென்னை :  

            முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின்படி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பள்ளி கல்வித்துறை பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக கடந்த பிப்ரவரி 27ம் தேதி அருப்புக்கோட்டை எம்எல்ஏ வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டார்.

இவர், அதிமுகவின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளராகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக அமைச்சர் வைகைச் செல்வன் மாற்றப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில், சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டு நல்லாசிரியர்களுக்கு விருது வழங்குவார் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. திடீரென்று அவரிடம் இருந்த கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில், விழாவில் அவர் கலந்து கொள்ளாமல், அவருக்குப் பதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டார்.

இதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சிறிது நேரத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும், அவருடையை பதவியை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கவனிப்பார் என்று கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அமைச்சர் வைகைச் செல்வன் பதவி பறிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுவரை நீக்கப்பட்ட அமைச்சர்கள் விவரம்

1    இசக்கி சுப்பையா
2    செந்தமிழன்
3    சண்முகவேலு
4    புத்தி சந்திரன்
5    சண்முகநாதன் (நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சர்)
6    உதயகுமார்
7    என்.ஆர்.சிவபதி
8    பரஞ்ஜோதி (ராஜினாமா)
9    செல்வி ராமஜெயம்
10    அக்ரி கிருஷ்ணமூர்த்தி
11    வேலுமணி
12    செங்கோட்டையன்
13    டி.ஜெயக்குமார் (சபாநாயகர்)
14    சி.வி.சண்முகம்
15    கோகுலஇந்திரா
16    என்.ஆர்.சிவபதி (2வது முறையாக மாற்றம்)
17    வி.எஸ்.விஜய்
18    செல்லப்பாண்டியன்
19    முகமதுஜான்
20    வைகைச்செல்வன்


இதுதவிர மரியம்பிச்சை மற்றும் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களாக இருக்கும்போது இறந்துள்ளனர்.


10 முறை அமைச்சரவை மாற்றம்

ஜெயலலிதா உள்ளிட்ட 34 அமைச்சர்கள் பதவியேற்பு 16.5.2011

முதல் முறை    29.6.2011
2வது    3.7.2011
3வது    4.11.2011
4வது    12.12.2011
5வது    26.1.2012
6வது    18.7.2012
7வது    4.10.2012
8வது    27.2.2013
9வது    17.6.2013
10வது    5.9.2013
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top