இராமேசுவரம்–பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
இராமேசுவரம்:
இராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் கடலில் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை.

அந்த பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் செல்வோர் மீது காற்றின் வேகத்தால் மண் வாரி வீசப்பட்டது. இந்த சூறாவளி காற்றின் வேகத்தால், கடலிலும் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் உருவாகி, கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவர்கள், கடலுக்குச் செல்ல டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் மீன்துறையினரால் எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு இருந்தது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால், மீன்பிடி டோக்கன் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
0 comments