22 August 2013

கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி

கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் 

ரூ.10 கோடி தர தயார்

தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

 

சென்னை:
 
              தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ரவிநயினார், சிதம்பரம், செயலாளர் நைனாமலை, உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* மதுக்களை விட கள் குடிப்பது நல்லதல்ல என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காலப் போக்கில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அரசு தரப்பும் விவாதத்தில் பங்கேற்கலாம். இந்த விவாதம் சென்னையில் நடத்தப்படும்.

* கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமையாகும் கள்ளுக்கு எதிரான கட்சிகளுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top