29 July 2013

இராமேசுவரத்தில் போலீஸ் கெடுபிடியை கண்டித்து இன்று கடையடைப்பு: சுற்றுலா பயணிகள் அவதி

இராமேசுவரத்தில் 
போலீஸ் கெடுபிடியை கண்டித்து  இன்று கடையடைப்பு 
சுற்றுலா பயணிகள் அவதி



இராமேசுவரம், ஜூலை. 29:

                     போலீஸ் கெடுபிடியை கண்டித்து இராமேசுவரத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் பிரசித்தி பெற்றது இராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் கோவிலுக்கு உள்ளதால் 3 அடுக்கு பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு நடவடிக்கையாக கோவிலின் ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்த வீதிகளில் கடைகளை நடத்தி வரும் வணிகர்களின் வாகனங்கள், அங்கு நிறுத்தப்பட்டால் கூட அதன் டயரில் இருந்து காற்று இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

மேலும் கடைகளின் முன்புள்ள பந்தல் போன்றவற்றை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் போலீசார் இடித்து அகற்றியுள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து வர்த்தக சங்கத்தினர் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

போராட்டம் குறித்து கடந்த 17–ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் சமரசக்கூட்டம் நடத்தப்பட்டது. தாசில்தார் மீனாட்சி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

இராமேசுவரத்தில் உள்ள ஓட்டல்கள், கடைகள், டீ ஸ்டால்கள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இன்று மூடப்பட்டு இருந்தன. இதனால் இராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பஸ், கார், ஆட்டோ போன்றவை மட்டும் வழக்கம்போல் ஓடின.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top