29 June 2013

அ. இ. அ. தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக இ.பொன்னுசாமி, பரிதி இளம்வழுதி நியமனம்

அ. இ. அ. தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக 

இ.பொன்னுசாமி, பரிதி இளம்வழுதி நியமனம் 
 

சென்னை:
                      நேற்று அதிமுகவில் இணைந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியையும், பாமக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்னுசாமியையும் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. 

கொடநாடு செல்வற்கு சற்று முன் இந்த இருவரும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து உறுப்பினர் கார்டை வாங்கிக் கொண்டனர். 

இந் நிலையில் இன்று கொடநாட்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள்

கழக உடன்பிறப்புகள்  இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.



Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top