கூட்டுத் தலைமையில் தேர்தலை எதிர் கொள்ளாவிட்டால்
படுதோல்வி அடைவோம்
அத்வானி எச்சரிக்கை
புதுடெல்லி:
கூட்டுத் தலைமை இல்லாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டால் தேசிய ஜனநாயக கூட்டணி சிதறிப் போகும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தொலைபேசியில் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் நரேந்திர மோடியை நாடாளுமன்ற பிரச்சாரக் குழு தலைவராக முன் நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகி கொண்டதாக அத்வானி கூறியதாக தெரிகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலை கூட்டுத் தலைமையில் சந்திக்க வேண்டும் ராஜ்நாத் சிங்கிடம் அத்வானி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடையும் என்றும், மத்தியில் 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தேசிய முற்போக்கு கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகயதற்கு காங்கிரஸ் அக்கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகளும் வெளியேற வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
0 comments