17 June 2013

கள்ளக்காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டின மனைவி


கள்ளக்காதலுக்கு இடையூறால் கணவனை 


தீர்த்துக் கட்டின மனைவி 



பண்ருட்டி :

 கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (27). மருந்துக்கடை ஊழியர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமண நாளை கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர்.

கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம் , பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.

எஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீ சார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்.

இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்:

“நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன்.

குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாச னுக்கும் திருமணம் நடந் தது. திருமணம் ஆனதிலி ருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது.

நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன். தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம்.

அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை.

மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம் , பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.''

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

''கொலை செய்ய டார்ச்சர்''

கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன்.

கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்'' என்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top