மதுரையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 60 வயது முதியவர் கைது
மதுரை அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரது பெற்றோரைச் சந்திக்க குடும்ப நண்பரான மதுரை அலங்காநல்லூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பெரிய கருப்பன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, சிறுமிக்கு தின்பண்டம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் பெரியகருப்பனை நேற்றிரவு கைது செய்தனர்.
அவர் மீது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை 6 - ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் பெரிய கருப்பன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் பெரிய கருப்பன் அடைக்கப்பட்டார்.
0 comments