பரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதல்
முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள்
2 பேருக்கு அரிவாள் வெட்டு
பரமக்குடி, ஜூன் 28:-
பரமக்குடி அருகே தி.மு.க. கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக எம்.பி. ரித்தீஷ் ஆதரவாளர்கள் 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன் ஆதரவாளருக்கும், எம்.பி. ரித்தீஷ் ஆதரவாளர் நாகராஜ் தரப் பினருக்கும் ஆற்று பாலம் அருகே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர் டி.கொடிக்குளத்தை சேர்ந்த கார்மேகம் மற்றும் ஒரு வருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், ரித்தீஷ் ஆதரவாளர்கள் நாகராஜ், தினகரன், கார்த்திக், கோட்டை, சிலம்பரசன், சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













0 comments