ஓவல் மைதானத்தில் சிறுநீர் கழித்த
இங்கிலாந்து வீரர்கள் 3 பேரிடம் விசாரணை
லண்டன், ஆக. 28:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. ஆசஷ் தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் கொண்டாடினார்கள். மைதானத்தில் அமர்ந்து வீரர்கள் மது அருந்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் ஓவல் மைதானத்திலேயே சிறுநீர் கழித்து உள்ளனர். பேட்ஸ்மேன் பீட்டர்சன், வேகப்பந்து வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் இதுகுறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் புகார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளது. இந்த சம்பவத்துக்காக முதலில் மன்னிப்பு கேட்குமாறு முதலில் அவர்களுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் மைதானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக வார்னே கூறும்போது, இங்கிலாந்து வீரர்களின் கர்வத்தை காட்டுகிறது. இது மிகுந்த அவமரியாதை படுத்தும் செயலாகும். வீரர்களின் கொண்டாட்டம் வீரர்களுக்கான அறையில் இருக்க வேண்டும் என்றார்.
0 comments