2 January 2014

டெல்லி சட்டபேரவை:நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி

டெல்லி சட்டபேரவை:
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி 


புதுடெல்லி:

         புதுடெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார்.

இதில்  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டபேரவையில் 36 உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top