உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி
சங்கிலியால் கட்டப்பட்ட மனநோயாளிகள்
சங்கிலியால் கட்டப்பட்ட மனநோயாளிகள்
கண்டு கொள்ளாத அமைச்சர், கலெக்டர்
இராமநாதபுரம்:
ஏர்வாடியில் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை திறப்பு விழா நடந்த இடத்தில் நோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை அமைச்சர், கலெக்டர் கண்டு கொள்ளவில்லை.
இராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் வழிபாட்டுடன் கூடிய புதிய முறையில் சிகிச்சை அளிக்கும் திட்டம் தவா மற்றும் துவா(மார்க்கம்- மருத்துவமனை) மனநல மருத்துவமனை துவக்க விழா நேற்று நடந்தது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், இராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சுந்தரராஜ் பேசும்போது, ஏர்வாடி தர்காவில் 2001ல் தனியார் மனநல காப்பகத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட 26 மனநோயாளிகள் தீவிபத்தில் கருகினர். சங்கிலியால் கட்டப்பட்ட மன நோயாளிகள் இங்கு கொண்டு வரப்படுகின்றனர். அவர்களை மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று நவீன சிகிச்சைகள் அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால், விழா நடந்த மைதானத்திலேயே மேடையில் இருந்து 200 அடி தொலைவில் பல மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். மனநோயாளிகளை சங்கிலியால் கட்டி வைத்து சிகிச்சை அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமைச்சரோ, கலெக்டரோ கண்டு கொள்ளவில்லை.

0 comments