9 November 2013

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடுசிறப்பு காவல் இளைஞர்படைக்கு நாளை (10-ந்தேதி) எழுத்துதேர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 
தமிழ்நாடுசிறப்பு காவல் இளைஞர்படைக்கு 
நாளை (10-ந்தேதி) எழுத்துதேர்வு



இராமநாதபுரம், நவ.9:

                  இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைக்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அரசு இணைய தளங்களிலும் வினியோகம் செய்யப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு மொத்தம் 4,419 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 3, 673 விண்ணப்பங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. இது தவிர 389 விண்ணப்பங்கள் ஆன் லைன்மூலம் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 360 பணிகளுக்கு 4 ஆயிரத்து 62 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இன்று இறுதிபட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 10-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 

எழுத்து தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்துக்கு 1 மணிநேரம் முன்பாகவே வர வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் மற்றும் பதிவெண்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும இணையதளம் மற்றும் காவல்துறை இணைய தளம் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அஞ்சலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

இணைய தளத்தில் பெயர் இருந்தும் அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் 9-ந்தேதி மாலை 5 மணி வரை நேரில் வந்து அழைப்பு கடிதம் நகலை பெற்றுக்கொள்ளலாம். 

அழைப்பு கடிதத்தினை பெற தவறிய தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்கள் இணைய தளத்தில் தேர்வு மைய விவரங்களை தெரிந்து கொண்டு எழுத்து தேர்வு அன்று உரிய மையத்துக்கு சென்று தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணபத்தின் நகல், சான்றாவணங்களை தேர்வு மைய அதிகாரியிடம் காண்பித்து தேர்வு எழுதலாம்.

எழுத்து தேர்வு மாவட்டத்தில் இராமநாதபுரம்,

கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, 
மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, 
எல்.பி.ரோடு சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி, 
மதுரைரோடு செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, 
மாவட்ட கலெக்டர் அலுவலக தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் 

ஆகிய மையங்களில் நடக்கிறது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தெரிவித்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top