தனுஷுடன் கிளு கிளுப்பான காட்சி :
நய்யாண்டி பட இயக்குனர் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்திருக்கிறார் நஸ்ரியா நாசிம். தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார்.
இந்த படத்தில் முதலிரவு காட்சியில் கிளு கிளுப்பான பாடலுக்கு தனுஷுடன் நடிக்க மறுத்துவிட்டார் நஸ்ரியா. இதுபோன்ற பாடல் காட்சி படத்தில் இடம்பெறுவதை சற்குணம் மறைத்துவிட்டாராம். ஷூட்டிங்கின்போதுதான் அதை நஸ்ரியாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே நடிக்க மறுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினார் நஸ்ரியா.
இதையடுத்து நஸ்ரியாவுக்கு பதில் டூப் நடிகையை வைத்து கிளு கிளுப்பான காட்சியை சற்குணம் படமாக்கிவிட்டார். இப்போது படம் அக்டோபர் 11ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் சற்குணம் மீது நஸ்ரியா கொடுத்த புகாரில், குறிப்பிட்ட பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை. ஆனால் நான் நடித்திருப்பதுபோல் காட்டுகிறார்கள். என் அனுமதி பெறாமல் இந்த காட்சியை படமாக்கியது தவறு. இதை படத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சங்கம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சற்குணம் மீது வழக்கு தொடரவும் நஸ்ரியா முடிவு செய்துள்ளாராம்.
0 comments