20 October 2013

வேளச்சேரியில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட வங்கி கிளை மேலாளரின் ரகசிய செல்போன்கள் சிக்கின

வேளச்சேரியில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 
வங்கி கிளை மேலாளரின் ரகசிய செல்போன்கள் சிக்கின
  


வேளச்சேரி: 

                வேளச்சேரி வங்கி மேலாளர் கொலையில் அவர் ரகசியமாக பயன்படுத்தி வந்த 2 செல்போன்கள் சிக்கின. இதை வைத்து அவரை கொலை செய்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (57). தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பெசன்ட் நகர் கிளை உதவி மேலாளர். இவரது மனைவி செல்வி (52). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், கலையரசன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுடன் நாகராஜின் தாய் கமலா (87) வசிக்கிறார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி நாகராஜ் கொலை செய்யப்பட்டார். அங்கு வந்த மர்ம நபர்கள் போதையில் இருந்த நாகராஜ் மார்பில் தாக்கியும், மூக்கு, வாயை பொத்தி மூச்சு திணற வைத்து சித்ரவதை செய்தும் கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.குற்றவாளிகளை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர்கள் முத்து ராஜா, சேகர்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நாகராஜ் வீட்டில் நகை பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. குற்றவாளிகள் நாகராஜின் பைக்கை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர். அந்த பைக்கும் பெருங்குடி ரயில்வே நிலையம் அருகில் போலீசாரால் மீட்கப்பட்டது.மேலும் விசாணையில், நாகராஜ் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக 2 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். 

அதில் இருந்து ஏராளமானோருக்கு போன் செய்துள்ளார். இதனால் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நாகராஜ் முன்பு ஆவடியில் வசித்து வந்தார். அங்கிருந்து வீடு மாற்றி வேளச்சேரிக்கு வரும்போது சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.

இதனால் நாகராஜிக்கு தெரிந்த நபர்தான் கொலை செய்திருக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top