தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது
சென்னை, அக். 5:–
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று திருப்பதி குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் படை உஷார்படுத்தப்பட்டது. திருப்பதி குடை ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவினர் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் போலீசார் சோதனையிட்டபோது தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான படை அவனை சுற்றி வளைத்து கைது செய்தது.
போலீசார் மடக்கிப் பிடித்ததும் பக்ருதீன் இன்ஸ்பெக்டரின் கழுத்தை நெரித்தும் கட்டிப்புரண்டு சண்டை போட்டும் தப்ப முயன்றான். உடனே இன்னொரு இன்ஸ்பெக்டர் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பக்ருதீனை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கூட்டாளிகள் எங்கே என்று விசாரித்தனர்.

0 comments