15 October 2013

15 பேரை பலி வாங்கிய மபி நெரிசல் கோரத்துக்கு காரணம் போலீஸ் தடியடியா? பாலம் உடைந்ததாக வதந்தியா?

15 பேரை பலி வாங்கிய மபி நெரிசல் கோரத்துக்கு காரணம் 
போலீஸ் தடியடியா? 
பாலம் உடைந்ததாக வதந்தியா?


தாட்டியா:  

              ரத்தன்கார் துர்கா கோயில் விழாவில் 115 பேர் உயிரிழந்த கொடூர துயர சம்பவம் பல கேள்விகளைஎழுப்பியுள்ளது. இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணமான சம்பவத்துக்கு போலீஸ் தடியடி காரணமா? வதந்தி பரப்பியதா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.  மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டம் ரத்தன்கார் கோயில் பிரபலமானது.  மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். அதிலும், நவராத்திரி விழா  நாட்களில் அதிக அளவில் கூட்டம் காணப்படும். நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை ஒட்டி சிறப்பு பூஜைகளுக்காக குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதில் பலி எண்ணிக்கை 115 ஐ தொட்டுள்ளது. இதுவரை 111 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 100 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சாதனையில் சோதனை: இந்தியாவையே மிரட்டிய பைலின் சூறாவளி கோரம்,  எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்று நினைத்த வேளையில், ராணுவ முப்படைகளும், தேசிய பேரிடர் பாதுகாப்பு அதிரடி படைகளும் சாதுர்யமாக களத்தில் இறங்கி நாட்டையே பெருமை பட வைத்தது.

 நான்கே நாட்களில் ஒன்பது லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு பெயர வைத்து அவர்கள் உயிரை பாதுகாத்த செயல் , போரில் வெல்வதை விட பெரும் சாதனை படைத்தது என்று கூறலாம். ஒடிசாவில் சனிக்கிழமை அன்று இரவு புயல் கரை கடந்த அடுத்த 12 மணி நேரத்தில் சேதங்களை ஆராய்ந்து, உடனே, மீட்பு பணிகளையும் செய்து நாடு முழுக்க மக்களை திக்குமுக்காட வைத்து விட்டது இந்த தேசிய படைகள்.   இப்படி சாதனையை கொண்டாட வேண்டிய நிலையில், ஞாயிறன்று எல்லா மீட்பு பணிகளும் ஏறத்தாழ முடிந்த நிலையில், ம.பியில் நெரிசலில் 100 பேருக்கு மேல் இறந்த சம்பவம் இடி போல தாக்கியது. ஏற்கனவே, இப்படி நெரிசலில் சிக்கி இறந்த சம்பவங்கள் நடந்திருந்த நிலையில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்காமல் மாநில அரசு இருந்தது பற்றி பலருக்கும் கோபம்.எது காரணம்: சம்பவம் நடக்க காரணமாக இரு விஷயங்களை எல்லாரும் சொல்கின்றனர். இதை அரசு இதுவரை விளக்கவில்லை. ஒன்று, சில முக்கிய விஐபிக்கள் செல்வதற்காக பக்தர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். அதனால் நெரிசல் ஏற்பட்டது.இரண்டாவது, போலீஸ் தடியடி நடந்த கூட்டம் வேகமாக நகர்ந்ததால், பாலத்தில் நெரிசல் ஏற்பட்டது. பாலம் இடிந்து விட்டதாக வதந்தி கிளப்பி விடப்பட்டதால் அதில் இருந்து பலரும் ஆற்றில் குதித்து விட்டனர். நெரிசல் அதிகரிக்கவும், பலி எண்ணிக்கை உயரவும் இதுவும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பக்தர்கள் எல்லாரும் நடுத்தர மக்கள் கூட இல்லை. அப்பாவி கிராம மக்கள். துர்கா தேவிக்கு நவராத்திரியில் பூஜை செய்ய குவிந்தவர்கள். இவர்கள் தான் பலி வாங்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே  கேரளாவில் சபரிமலை, ராஜஸ்தான் சாமுண்டீஸ்வரி கோயில் நெரிசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்களும், பெண்களும் ஏன், குழந்தைகளும் கூட பலியாகி இருக்கின்றனர். சபரிமலை நெரிசல் 40 பேரை பலி வாங்கியது. ராஜஸ்தான் சாமுண்டீஸ்வரி கோயில் விழா 200 பேரை பலி வாங்கி விட்டது. மபி கோயில் பலி ஏறிக்கொண்டே இருக்கிறது.  கடந்த 2008 இமயமலை அடிவாரத்தில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நைனா தேவி கோயிலில் நெரிசலில் 145 பேர் இறந்தனர்; அதே ஆண்டு மார்ச் மாதம் மபி மாநிலம் காரிலா மாவட்டம் ஜானகி மாதா கோயிலில் 8 பேர், ஜூன் மாதம்  ஒரிசா புரி ஜகநாத் கோயிலில் 6 பேர் இறந்தனர்.அலகாபாத் ரயில் நிலைய நெரிசல் சம்பவத்துக்கும் இப்போது மபி கோயில் நெரிசல் சம்பவத்துக்கும் ஒற்றுமை  உண்டு. அலகாபாத்தில் ரயில்வே மேம்பாலம் நொறுங்கி விட்டதாக வதந்தி பரப்பினர் சிலர்.

இங்கு பாலம் உடைந்து விட்டதாக வதந்தி. ஆனால், இரண்டு பாலங்களுமே நல்ல நிலையில் தான் உள்ளன. பாடம் கற்குமா அரசு: ஏற்கனவே பக்கத்து மாநிலங்களில் கோயில் நெரிச லில் அடிக்கடி உயிர் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன நிலையில் மபி அரசோ,  அதன்  முதல்வர் சிவராஜ் சிங் சவுகானோ பாடம் கற்காதது ஏனோ  என்பது வேதனையான விஷயம். கூட்டத்தை கட்டுப்படுத்துவது போலீசின் வேலை மட்டுமல்ல, ஒழுங்குபடுத்துவதும் அரசின் வேலை தான். இதில் சில மாநிலங்களை போல ஏன் மபி அரசு செயல்படவில்லை என்பதும் வேதனை என்று பலரும் கேட்கின்றனர். ஐந்து லட்சம் பேர் திரள்வர் என்று தெரிந்திருந் தும் கோயில் நிர்வாகம், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளை அவ்வப்போது செய்வது, ஒழுங்குபடுத்த வேண்டிய ஊழியர்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் என்று  எந்த ஏற்பாட்டையும் கோயில் நிர்வாகம் செய்யவில்லை.  வெளியே ஓடுவதற்கும் கூட சரியான எமர்ஜென்சி பாதைகள், வழிகள் எதுவும் இல்லை. அந்த அளவுக்கு நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. அரசு விசாரணையில் இந்த கோரம் தொடர்பாக முழு உண்மைகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சவுகான் ராஜினாமா காங்கிரஸ் கேட்கிறது
             காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அஜய் மாகன் டெல்லியில் கூறியது: பாடங்கள் கற்றும் கூட, மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் எடுக்காதது அலட்சியத்தின் உச்சம். இது தான் அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. கடந்த ஐந்தாண்டாக கோயில் நெரிசலில் சிக்கி பலரை இழந்த சம்பவங்கள் பல நடந்து விட்டன. அப்படியும் நாம் பாடம் கற்கவில்லையா? இதற்கு தார்மீக பொறுப்பை சவுகான் தான் ஏற்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஊழல் காரணமாக தான் சரியான நடவடிக்கைகளை  எடுக்க முடியாமல் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

200 லஞ்ச போலீஸ் திக்விஜய்போட்ட குண்டு

ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்:  நெரிசலுக் காரணம், 200 ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு ‘நோ என்ட்ரி’ பகுதிகளில் நுழைய போலீஸ் அனுமதித்துள்ளது. மபியில் இந்த லட்சணத்தில் போலீஸ் இருக்கிறது. பக்தர்களை தவறான வழியில் செல்ல டிராக்டர்களுக்கு போலீஸ் அனுமதியும் தந்து விட்டு, தடியடியும் நடத்தியுள்ளது.

இது தான் மபி அரசு சிறப்பாக நடத்தும் அழகா? சவுகான் சொல்வாரா? ராஜினாமா செய்வாரா?திக்விஜய் இப்படி ‘ட்விட்டிய’தை மாகனும் நிருபர்கள் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

இதே வாடிக்கைஇவருக்கு கீர்த்தி ஆசாத்கோபம்

பாஜவின் கீர்த்தி ஆசாத்: உயிரிழந்தவர் களுக்கு அனுதாபம் தெரிவிக்காமல், காயமடைந்தவர் களை காக்க நடவடிக்கைள் குறித்து விசாரிக்காமல், பிணத்திலும் அரசியல் பேசுவது திக்விஜய்க்கு வாடிக்கையாகி விட்டது. இது  கேவலமான அரசியல். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  ஆறுதலாக இருப்போம் நாங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம்.  எங்களுக்கு  அறிக்கை விட நேரமில்லை.



Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top