பொம்மை வாங்கி தருவதாக ஏமாற்றி சிறுமியை
வேனில் கடத்தி பலாத்காரம்
துரைப்பாக்கம் :
பொம்மை வாங்கி தருவதாக ஏமாற்றி சிறுமியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர், போதையில் ஓட்டியதால் பள்ளி சுவரில் மோதி பொதுமக்களிடம் சிக்கினார். அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த வழியாக நேற்று முன்தினம் மாலை சென்ற மினி வேன், திடீரென பள்ளியின் சுற்றுச்சுவர் மீது மோதி நொறுங்கி கிடந்தது. வேனில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதிகள் சந்தேகப்பட்டு வேன் அருகே சென்று பார்த்தனர்.
அப்போது, வேன் கண்ணாடியை உடைத்து கொண்டு ஒருவர் வெளியே வர முயற்சித்து கொண்டு இருந்தார். வேனுக்குள் ஆடை இல்லாமல் ரத்தவெள்ளத்தில் சிறுமி ஒருத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். அவர்களுடைய சத்தம் கேட்டு மக்கள் திரண்டனர். முதலில் சிறுமியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு தம்பதி சென்று போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே போதையில் இருந்த ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர். அவரை போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர், ஈஞ்சம்பாக்கம் கவுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்று தெரிந்தது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சுரேஷ்குமார் திருமணமானவர். மினி வேன் ஓட்டுகிறார். தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வருவார். தண்ணீர் கேன் வியாபாரமும் செய்கிறார். ஆயுத பூஜையன்று வாகனத்துக்கு பூஜை போட்டுள்ளார். பின்னர், மது அருந்திவிட்டு வேனில் சுற்றியுள்ளார். பெருங்குடியில் உள்ள பழக்கடை அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை அழைத்து என்னுடன் வந்தால் விளையாட பொம்மை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பி சிறுமியும் அவருடன் வேனில் சென்றுள்ளார். வேன் சிறிது தூரம் சென்றதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சுரேஷ்குமார். இதனால் சிறுமியின் கன்னம், கை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. தொடர்ந்து போதையில் வேனை ஓட்டி சென்ற போது பள்ளி சுவர் மீது மோதி நொறுங்கி சிக்கினார்.

பெருங்குடியில் சிறுமியின் பாட்டி பழக்கடை வைத்துள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த போதுதான் சிறுமியை சுரேஷ்குமார் அழைத்து வந்திருக்கிறார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முகமது அஸ்லாம் விசாரித் தார். போலீசார் வழக்கு பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments