3 September 2013

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தொடருக்கான 
போட்டி அட்டவணை அறிவிப்பு



லண்டன், செப்.3:-


                இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2014) ஜூன் 26-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரண்டு 3 நாள் பயிற்சி ஆட்டமும், ஒருநாள் போட்டிக்கு முன்பு ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் ஜூலை 9-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ்சில் ஜூலை 17-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஜூலை 27-ந் தேதியும், 4-வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராப்போர்ட்டில் ஆகஸ்டு 7-ந் தேதியும், 5-வது டெஸ்ட் போட்டி ஓவலில் ஆகஸ்டு 15-ந் தேதியும் தொடங்குகிறது.

முதலாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் ஆகஸ்டு 25-ந் தேதியும், 2-வது போட்டி சோபியா கார்டனில் ஆகஸ்டு 27-ந் தேதியும், 3-வது போட்டி டிரென்ட் பிரிட்ஜில் ஆகஸ்டு 30-ந் தேதியும், 4-வது போட்டி எட்ஜ்பஸ்டனில் செப்டம்பர் 2-ந் தேதியும், 5-வது போட்டி ஹெட்டிங்லேவில் செப்டம்பர் 5-ந் தேதியும் நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டி எட்ஜ்பஸ்டனில் செப்டம்பர் 7-ந் தேதி நடக்கிறது.

1959-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 0-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் தோல்வி கண்டது. 20 ஓவர் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்திய அணியின் நியூசிலாந்து தொடர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 19-ந் தேதியும், 2-வது போட்டி 22-ந் தேதியும், 3-வது போட்டி 25-ந் தேதியும், 4-வது போட்டி 28-ந் தேதியும், 5-வது போட்டி 31-ந் தேதியும் நடக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 14-ந் தேதியும் தொடங்குகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top