லண்டனில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 80 பேர் காயம்
லண்டன்:
லண்டனின் உள்ள புகழ்பெற்ற தியேட்டரில் 700க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நாடகம் பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது, தியேட்டரின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்ததில் பார்வையாளர்கள் 80 பேர் காயமடைந்தனர். 7 பேர் படுகாயமுற்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் தியேட்டரில் மேடைக்கு அருகில் நான்கு இருக்கைகள் தள்ளி நாடகம் பார்த்து கொண்டிருந்தோம். அப்போது நாடகத்தில் நடித்து கொண்டிருந்தவர், "அங்கு பாருங்கள், அங்கு பாருங்கள்" என்ற திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார். முதலில் அதை நாங்கள் நாடகத்தின் ஒரு பகுதி தான் என நினைத்திருந்தோம். பின்னர் தான் அது விபத்து என்று தெரிய வந்தது. எங்களுக்கு பின்னால் கட்டிட துகள்கள் விழுந்து கிடந்தன.
இதுகுறித்து தீயணைப்புதுறை அதிகாரி கூறுகையில், நாங்கள் அனைவரையும் பத்திரமாக அரங்கிலிருந்து வெளியேற்றி விட்டோம். படுகாயமடைந்த 7 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
0 comments