9 September 2013

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்

 

 

நியூயார், செப்.9:–


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் உலகின் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) மோதினார்கள்.

இதில் செரீனா 7–5, 6–7 (6–8), 6–1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 2 மணி 45 நிமிட நேரம் தேவைப்பட்டது. 1980–ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பெண்கள் இறுதிப் போட்டி அதிக நேரம் நடந்த ஆட்டம் இதுவாகும்.

செரீனா கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் அசரென்காவை வீழ்த்தினார். இந்த முறை அதற்கு அசரென்கா பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செரீனாவின் அபாரமான ஆட்டத்துக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

அமெரிக்க ஓபன் பட்டத்தை அதிக வயதில் வென்றவர் என்ற சாதனையையும் 31 வயதான செரீனா படைத்தார். 1973–ம் ஆண்டு மார்கர் சோர்ட் அதிக வயதில் சாம்பியன் பட்டம் பெற்றதே சாதனையாக இருந்தது. அவரை விட செரீனா 293 நாட்கள் அதிகமாகி பட்டம் வென்றார்.

செரீனா வில்லியம்ஸ் பெற்ற 17–வது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை (1999, 2002, 2008, 2012, 2013) வென்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5 முறையும் (2003, 2005, 2007, 2009, 2010), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும் (2009, 2013) விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும் (2002, 2007, 2009, 2010, 2012) வென்று உள்ளார்.

ஓபன் எராவில் ஸ்டெபி கிராப் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ்வொர்ட், மார்ட்டினா நவரத்திலோவா (அமெரிக்கா) ஆகியோர் தலா 18 கிராண்ட்சிலாம் பட்டமும் பெற்று உள்ளனர். செரீனா வில்லியம்ஸ் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் கணக்கில் மார்க்கரெட் கோர்ட் (அமெரிக்க) 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற செரீனாவுக்கு ரூ.24 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அவர் 2 கிராண்ட் சிலாமை (பிரெஞ்சு ஓபன் அமெரிக்கா) வென்றார். இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அசரென்காவும், விம்பிள்டன் பட்டத்தை மரியான் பர்ட்டோலியும் வென்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top