‘காளி’ கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின்
‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘காளி’. இந்தப் படத்தை ‘அட்டக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்க, கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ‘அந்தல ராக்ஷசி’ தெலுங்கு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கலையை டி.ராமலிங்கம் கவனிக்க, எடிட்டிங்கை பிரவீன் கே.எல்., ஸ்ரீகாந்த் ஆகியோர் கவனிக்கின்றனர்.
கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி‘ படத்திற்கும் இவர்கள்தான் எடிட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments