1 September 2013

தனுஷ், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்கும் அனேகன்

தனுஷ், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்கும் அனேகன்


கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், ‘அனேகன்’ என்ற புதிய தமிழ்ப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ’மாற்றான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் இது.

அனேகன் என்றால்? ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வெகு நாட்களுக்குப்பிறகு வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் பதிக்க உள்ள நவரச நாயகன் கார்த்திக், மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த அமிரா, தனுஷூக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2 அன்று, பாண்டிச்சேரியில் துவங்குகிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார்.

தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். காதலும், நகைச்சுவையும், பொறிப்பறக்கும் சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில் தனுஷ் இதுவரை காணப்படாத தோற்றங்களில் தோன்றி கலக்கவிருக்கிறார்.

கே.வி.ஆனந்தின் முந்தைய படங்களில் பணியாற்றிய இரட்டை எழுத்தாளர்கள் சுபா, இத்திரைப்படத்துக்கும் அவருடன் இணைந்து கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்கள்.

இப்படம் வியட்நாம், கம்போடியா, மலேஷியா, பொலீவியா போன்ற வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடர உள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top