17 May 2013

வெளியூர்ல வேலையா.. மனைவியை பிரியணுமா? தற்காலிகமா ஒரு கல்யாணம் பண்ணு.. என்ஜாய் பண்ணு..

வெளியூர்ல வேலையா.. மனைவியை பிரியணுமா?
தற்காலிகமா ஒரு கல்யாணம் பண்ணு.. என்ஜாய் பண்ணு..
 



பீஜிங்: சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்காக வந்தவர்களும் இதுபோன்ற தற்காலிக திருமணம் செய்து கொள்வது தெரிய வந்துள்ளது.

வேறு இடத்தில் இருந்து வந்து சீனாவில் வேலை செய்யும் தொழிலாளர்களில், லியூ லி என்பவர் சீன நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் லியூ லி தான். இவர் கூறுகையில், ''தற்காலிக திருமணம், சேர்ந்து வாழ்தல் போன்றவற்றை கேட்டால் ஆச்சரியம் அளிக்கும். ஆனால், வேறு இடங்களில் இருந்து சீனாவில் வேலை செய்யும் சமூகத்திடம் இது சகஜம்'' என்கிறார்.

தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட கம்பெனிகள் வீடு வசதியும் ஏற்படுத்தி தருகின்றன. அப்போதுதான், பொருட்களை தரமாக உற்பத்தி செய்ய முடியும் என்று கம்பெனிகள் நினைக்கின்றன. மேலும், ''விபசாரத்தில் ஈடுபடுவது, தவறான பாதையில் போவது போன்றவற்றை தற்காலிக திருமணங்கள் தடுத்து விடுகின்றன. இந்த கலாசாரம் ஒரு வகையில் நல்லதுதான்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதேசமயம், தற்காலிக திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் பெண்கள் பிற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top