22 August 2013

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது ஆஸ்திரேலிய காதலியை மணந்தார்

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது ஆஸ்திரேலிய காதலியை மணந்தார்




லாகூர், ஆக. 22:

                பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் 47, தனது 30 வயதான ஆஸ்திரேலிய காதலி தாம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார்.  

லாகூரில் சென்ற 12-ம் தேதி எளிமையாக நடந்த விழாவில் நான் ஷனீராவை திருமணம் செய்துகொண்டேன். இது எனக்கு, எனது மனைவி, மகன்களுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி ஷனீராவிடம் வாசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார். இதனையடுத்து இருவீட்டர் சம்மதத்துடன் சென்ற அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

அவரது முதல் மனைவி ஹூமா நோய்வாய் பட்டநிலையில் 2009-ம் ஆண்டு சென்னையில் இறந்தார். உடல் நிலை சரியில்லாத தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று மதபோதகர் கூறியதை அடுத்தும் இந்த திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top