29 August 2013

சவூதியில் மருத்துவப் பணி வாய்ப்பு: நேர்முகத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சவூதியில் மருத்துவப் பணி வாய்ப்பு

 நேர்முகத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்




சென்னை, ஆக. 29:-


அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு சுகாதார மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெருமளவில் தேவைப்படும் கண்சல்டண்ட், சிறப்பு மற்றும் ரெசிடென்ட் மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை போன்ற நகரங்களில் 31.8.2013 முதல் 7.9.2013 வரை நடைபெற உள்ளது.

இரண்டு வருட அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட கண்சல்டண்ட் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் மருத்துவர்கள் நேர்முகத் தேர்விற்கு தகுதியுடையவர் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களுக்கு இலவச குடும்ப விசா, விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் உணவு ஆகியவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட நேர்முகத் தேர்விற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். www.omcmanpower.com என்ற வலைதளத்திற்கு சென்று அல்லது 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறியலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top