5 August 2013

வன்முறை சம்பவத்துக்கு ஒரு சல்லி பைசா கூடஇழப்பீடு வழங்க முடியாது : அன்புமணி ராமதாஸ்


  வன்முறை சம்பவத்துக்கு ஒரு சல்லி  பைசா கூடஇழப்பீடு வழங்க முடியாது : அன்புமணி ராமதாஸ்



சென்னை :
 

                      ஒருங்கிணைந்த சென்னையின் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம், மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் தயாளன் முன்னிலை வகித்தார். சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். பாமக தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில், ராமதாசை கைது செய்ததற்கும், 8 ஆயிரம் பாமகவினர் கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: வரும் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் பாமக மக்களுக்காக ஆற்றிய பணிகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, நம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய, வேண்டிய எல்லா பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மக்களவை தேர்தலில் உறுதியாக 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாமக தலைமையிலான ஆட்சி அமையும்.

பாமக ஆட்சியில் இலவச பொருட்கள் வழங்குவதும், மதுக்கடைகளும் இருக்காது. கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும். வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். 

தமிழக அரசு பாமக இத்தனை கோடி வழங்கவேண்டும், அத்தனை கோடி வழங்கவேண்டும் என்று கூறி வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்களிடம் இருந்து ஒரு சல்லி காசை கூட வாங்க முடியாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top