மீண்டும் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியுடன் ஜோடி சேருகிறார் ஜெய்
சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய்-சுவாதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்கள் இருவரின் காதல் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறார்கள். தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘வடகறி‘ என்ற படத்தில் ஜெய்யும், சுவாதியும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும், மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஜெய் தற்போது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்ற படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சுவாதியும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.













0 comments