18 July 2013

கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட மேல்மருவத்தூர் பெண் எஸ்ஐ எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது

கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட 
மேல்மருவத்தூர் பெண் எஸ்ஐ எலும்புக்கூடு 
கண்டுபிடிக்கப்பட்டது

சென்னை : 

கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட பெண் எஸ்ஐ உடல் 2 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அதை தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். 
 

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ கலைவாணி (25). இவர் 2010 ஆகஸ்ட் 26ம் தேதி முதல் காணாமல் போனார். மேல்மருவத் தூர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ்குமார் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் கலைவாணி பற்றி துப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பழைய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அங்கு அனாதையாக நின்ற ஸ்கூட்டி ஒன்றில், 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான எஸ்ஐ கலைவாணி பெயரில் ஆர்சி புத்தகம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. கலைவாணியின் செல்போனை மீண்டும் ஆய்வு செய்தபோது, திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை செய்த வெங்கடேசன் என்பவர் சிக்கினார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது “எஸ்ஐயுடன் கள்ள காதல் வைத்திருந்தேன். திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் கொலை செய்தேன்'' என ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். சடலத்தை மறைக்க உதவியாக இருந்த அவரது நண்பர் சுப்பன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கலைவாணி புதைக்கப்பட்ட காவேரிப்பாக்கம் அருகே உள்ள சங்கரம்பாடி பாலா ற்றிற்கு வெங்கடேசனை போலீசார் அழைத்து சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் சடலத்தை தேடும் பணி நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு தொடங்கியது. எதுவும் கிடைக்க வில்லை.  நேற்று மாலை 5 மணியளவில் 5 அடி ஆழத்தில் 2 கை எலும்புகள் முதலில் கிடைத்தன. அதே இடத் தில் சற்று ஆழமாக தோண்டியபோது ஒரு மண்டை ஓடு, இடுப்பு எலும்பு, கால் எலும்புகள் கிடைத்தன. மூக்குத்தி, கம்மல் கிடைத்தது. 

எலும்புக்கூடு மட்டுமே கிடைத்துள்ளதால் தடய அறிவியல் ஆய்வுக்கூடத் துக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். மண்டை ஓட்டை வைத்து சூப்பர் இம்போஸ் முறை யில் கலைவாணியின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். மேலும், கலைவாணியின் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்படும் மாதிரி மற்றும் அவரது பெற்றோரிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரியில் இருந்து டிஎன்ஏ சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

5ம் வகுப்பு படித்தவர் வக்கீல் என மோசடி

கைது செய்யப்பட்ட வெங்கடேசன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கடேசன் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை செய்து விட்டு, தன்னை வக்கீல் என கூறி விசிட்டிங் கார்டு அச்சடித்து வினியோகம் செய்து பல ஊர்களில், பலரை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்த வழக்குகள் காஞ்சிபுரம், கனகம்மாசத்திரம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. வெங்கடேசனை போலீசார் கைது செய்த போது, அவரிடமிருந்து 40 கிலோ எடையுள்ள சில்லரை நாணயங்களை கைப்பற்றினர். இது கோயில் உண்டியலில் திருடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மனைவியை கள்ளக்காதலன்தான் கடத்தினார்
பெண் எஸ்ஐ கணவர் 3 ஆண்டுக்கு முன்பே புகார்

மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐ கணவர் சுரேஷ்குமார் 2010 செப்டம்பர் 19ம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அதில், கூறியிருந்ததாவது:
 கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் என் மனைவி கலைவாணி பணியில் இருந்தார். காவல் நிலைய குடியிருப்பில் மனைவியுடன் குடியிருந்தேன். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து தனியாக இருந்தேன். அப்போது மாவூரை சேர்ந்த வெங்கடேசனுடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். இதனால் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் குழந்தைகளின் நலன் கருதி 2009ல் இருந்து கலைவாணியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு கலைவாணி மாற்றப்பட்டார். 2010 ஆகஸ்ட் 26ம் தேதி பணிக்கு சென்றார். ஆனால் பணி முடிந்து வீடு திரும்பவில்லை.

சம்வத்தன்று 26ம் தேதி வெங்கடேசன் காவல் நிலையத்துக்கு வந்து எஸ்ஐயை சந்தித்து பேசியுள்ளார். எனவே வெங்கடேசன்தான் என் மனைவியை கடத்தியிருக்க வேண்டும். கள்ளத்தொடர்பு வைத்துள்ள என் மனைவி மற்றும் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top