3000 வருடம் பழமையான டேவிட் மன்னர் அரண்மனை
கண்டுபிடிப்பு
ஜெருசலேம், ஜூலை. 22:
இஸ்ரேலில் பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது.

இதில் அங்கு பழங்கால கட்டிடம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. இந்த கட்டிடம் பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீது மன்னரின் அரண்மனை என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிர்பெட் குயாபா நகரம் தாவீது மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நகரமாகும். எனவே, இங்கு தாவீது மன்னர் தனது அரண்மனையை நிறுவியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய பொருட்களான முள்கரண்டிகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தாவீது மன்னர் உபயோகித்த பொருட்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இந்த கட்டிடம் தாவீது மன்னரின் அரண்மனை அல்ல என எதிர்ப்பாளர்கள் விவாதிக்கின்றனர். இது தாவீது மன்னருக்கு பின் வந்த மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments