காங்கிரஸின் அடுத்த சாதனை
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு
இன்று நள்ளிரவு முதல் அமல்
புதுடெல்லி, ஜூலை 1:-
டீசல் விற்பனையால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில் மாதந்தோறும் 45 காசுகள் முதல் 50 காசுகள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வாட் வரியைப் பொறுத்து ஒவ்வொரு நகருக்கும் விலை உயர்வு மாறுபடும். டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.50.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 58 காசுகள் உயர்ந்து ரூ.50.84-க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல்

கொல்கத்தாவில் டீசல் விலை ரூ.54.57-ல் இருந்து 55.16 ஆகவும்,
மும்பையில் ரூ.56.99-ல் இருந்து 57.61 ஆகவும்,
சென்னையில் ரூ.53.54-ல் இருந்து ரூ.54.15 ஆகவும்
உயர்வு கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 6 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இழப்பு ஈடுசெய்யப்படும் வரை மாதந்தோறும் விலை உயர்வு இருக்கும்.

கடைசியாக மே 31-ம்தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments