முத்தரப்பு கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது
கிங்ஸ்டன், ஜூலை 1:-
வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்காலிக கேப்டன் வெய்ன் பிராவோ காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். கேப்டன் பதவியை பொல்லார்ட் கவனித்தார். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ரன் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் கண்ட விராட்கோலி 11 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 60 ரன்களும், சுரேஷ் ரெய்னா 44 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 230 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெயில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதர வீரர்கள் ரன்கள் விவரம்:-
பிராவோ - 55,
சார்லஸ் - 97,
ஸ்மித் - 1,
பொல்லார்ட் - 4,
ரம்டின் - 4,
சமி- 29,
ரோச் - 14,
நரைன் - 5,
பெஸ்ட் - 3.
47.4 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 230 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
97 ரன்களை எடுத்த சார்லஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.

0 comments