பெண் எஸ்ஐயை திருமணம் செய்ய
கோவை : பெண் எஸ்ஐயை திருமணம் செய்ய 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் வரதட்சனை கேட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி(31). இவர், குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ், தன்னை திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் செய்தார்.
தங்கராஜ், அவரது தந்தை செம்பன், தாய் காவிரி, நண்பர் பிரகாஷ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தங்கராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது புகார் கூறிய எஸ்ஐ உமாமகேஸ்வரி பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர். எம்ஏ., எம்காம்., படித்துள்ளார்.

2004ல் போலீஸ் பணிக்கு சேர்ந்த அவர், 2011ல் பயிற்சி எஸ்.ஐயாக கன்னியாகுமரியில் பணியாற்றினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜ். வழக்கறிஞரான இவர் கன்னியாகுமரியில் பயிற்சி பெற்றார். அப்போது தங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். பின், தங்கராஜ் பதவி உயர்வு பெற்று குன்னூர் வந்தார். அவருக்காக எஸ்ஐ உமாமகேஸ்வரியும் பணிமாறுதல் வாங்கி கடந்த 6 மாதங்களுக்கு முன் பல்லடம் வந்துள்ளார்.
தங்கராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு எஸ்ஐ வலியுறுத்தியுள்ளார். அதற்கு தங்கராஜ், எனக்கு மாஜிஸ்திரேட் பதவி உயர்வு கிடைத்துள்ளது. எனவே, 100 பவுன் நகை, ஸீ50 லட்சம் பணம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறினாராம். தன்னுடன் இருந்த தொடர்பு குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள் ளார். இதனால்தான் உமா மகேஸ்வரி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
எஸ்ஐ மீது நடவடிக்கை: எஸ்ஐ உமாமகேஸ்வரி கடந்த 20 நாட்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார். மருத்துவவிடுப்பில் இருந்தபடி தர்ணா, முற்றுகை போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எஸ்ஐ உமாமகேஸ்வரின் இந்த செயல் காவல்துறைக்கு எதிரானது ஆகும். விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்த பின் இதுபற்றி நடவடிக் கை இருக்கும் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
எஸ்ஐயிடம் பேரம்: எஸ்ஐ உமாமகேஸ்வரி கூறியது: தங்கராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கூறிக் கொண்டு சிலர் எனக்கு கடந்த சில நாட்களாக தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு ரூ.30 லட்சம் பணம் தருகிறோம் வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி என்னை மிரட்டுகின்றனர். என்னை ஏமாற்றிய தங்கராஜுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments