ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட்
இன்று நள்ளிரவு விண்ணில் பாய்கிறது
சென்னை :
பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு 11.41 க்கு விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்,1 ஏ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீர், நிலம், ஆகாய மார்க்கங்களில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.
ராக்கெட் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, கடந்த 29ம் தேதி காலை 7.11 மணிக்கு கவுன்ட் டவுன் தொடங்கியது. நேற்று பி.எஸ்,4 இயந்திரத்துக்கான எரிபொருள் நிரப்பும் பணி முடிந்தது. அதையடுத்து ரீ ஆக்ஷன் கண்ட்ரோல் முதல் நிலை (பி.எஸ்,1) பணிகள் முடிக் கப்பட்டன. தொடர்ந்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், ராக்கெட்டின் இன்ஜின்கள், பூஸ்டர்கள் உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் கம்ப்யூட்டர் மூலம் கண்காணித்தனர்.
பொதுவாக ராக்கெட்டுகள் பகல் நேரத்தில் செலுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் பி.எஸ்.எல்.வி, சி.22 ராக்கெட்டை பொறுத்தவரை இதில் பொருத்தப்பட்டுள்ள உந்துசக்தி பூஸ்டர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இரவில் செலுத்தப்படுகிறது.

0 comments