2013-ம் ஆண்டுக்கான ‘டிராவலர்ஸ் சாய்ஸ் அட்ராக்சன்‘ விருதுகள்
முதல் இரண்டு இடம் மட்சு பிட்சு, அங்கோர்வாட்
தாஜ்மகாலுக்கு 3 வது இடம்
ஆக்ரா, ஜூன் 30:
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகால் உலகில் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த தலங்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
‘டிரிப் அட்வைசர்‘ என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தளம் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா தலங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பட்டியலை தயாரித்துள்ளது. அவர்களின் கருத்துக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் 25 முக்திய சுற்றுலாத் தலங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தலங்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான ‘டிராவலர்ஸ் சாய்ஸ் அட்ராக்சன்‘ விருதுகள் வழங்கப்படும்.
பெரு நாட்டில் உள்ள மட்சு பிட்சு
மற்றும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட்
ஆகியவை முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன.
யுனெஸ்கோ 1983-ம் ஆண்டு தாஜ்மகாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து மட்டும் 2 லட்சம் பேர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments