22 June 2013

குற்றாலம் நீர்வீ்ழ்ச்சி உயிர் பறிக்கும் மரணக்குழியாக மாறுகிறது

குற்றாலம் நீர்வீ்ழ்ச்சி உயிர் பறிக்கும் மரணக்குழியாக மாறுகிறது 



குற்றாலம்: 
                         தென்னி்ந்தியாவின் ஸ்பா என்று வர்ணிக்கப்படும் குற்றாலம் நீர்வீ்ழ்ச்சி உயிர் பறிக்கும் மரணக்குழியாக மாறி வருகிறது.ஒவ்வொரு சீசனின் போதும் இங்கு உயிர்ப்பலி ஏற்படத் தவறுவதில்லை. ஆனால் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத அவல நிலையும் தொடர்கிறது.

3 மாத சீசன்


குற்றாலத்தில் ஆண்டுத் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் களை கட்டும்.இந்த நாட்களில் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டும் குற்றால சீசன் ஜூன் முதல் வாரத்திலேயே தொடக்கி விட்டதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது.

ஆர்ப்பரிக்கும் மரண அபாயம்

ஆர்பரித்து கொட்டும் அருவி நீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர். இதில் சிலர் தண்ணீர் கொட்டும் ஆர்ச் வளைவுக்குள் சென்று நெடும் நேரம் குளியல் நடத்துவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து அருகிலிருக்கும் தடாகத்தில் விழுந்து மரணம் அடைந்து விடுவதும் நடந்து வருகிறது.

2 பேர் மரணம்


நேற்று இரவு மதுரை பேரையூர் அம்மாபட்டி அழகர் சாமி என்பவர் இதே போல் மரணம் அடைந்தார்.அதிகாலை மதுரை ஜவகர் என்ற வாலிபரும் மூச்சு திணறி பலியானார்.

தடுப்புச் சுவர் அமைப்பதில் அலட்சியம் 

தடாகத் திற்குள் அருவி நீர் கொட்டும் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தால் இது போன்ற உயிர் இழப்புக்களை தடுக்க முடியும்,மேலும் அருவிக் கரையில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top