தமிழகத்தில் பள்ளி நேரம் மாற்றம் : நாளை முதல் அமல்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளின் பாடவேளை மற்றும் பள்ளி தொடங்கும் நேரமும் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆய்வு கூட்டம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் நாளை முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
காலை 9மணிக்கு பள்ளி தொடங்கும். 9 முதல் 9.20மணி வரை இறைவணக்கம்.
9.20 முதல் 12.40 மணி வரை வகுப்பு நடைபெறும்.
12.40 முதல் 1.10 மணி வரை மதிய இடைவேளை.
1.10 முதல் 1.20 மணி வரை வாய்ப்பாடு சொல்லுதல் நடைபெறும்.
இதை தொடர்ந்து 1.25 முதல் 4.15 மணி வரை வகுப்புகள் நடைபெற்று
பள்ளி முடிவு பெறும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.













0 comments