சாம்பியன்ஸ் டிராபி
இறுதிப் போட்டி இந்தியா பேட்டிங்
மழையால் ஆட்டம் தாமதம்
எட்பாஸ்டன்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.
இந்தியாவை பேட் செய்ய அது பணித்துள்ளது. கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி இன்று எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, எந்தவிதம மாற்றமும் இல்லாமல் களம் இறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கேப்டன் குக் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்தியா பேட் செய்ய களம் இறங்கவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி இன்னும் தொடங்கவில்லை.
0 comments