மாநிலங்களவைத் தேர்தலில் 
அ.இ.அ.தி.மு.க. சார்பில் 5 வேட்பாளர்கள் போட்டி
 முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு
அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் நிறுத்தப்படும் 5 வேட்பாளர்களின் பெயர்களை முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, 
1. கழக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவரும், கழக மருத்துவ அணித்          தலைவருமான டாக்டர் வா. மைத்ரேயன், 
2. நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் திரு. கே.ஆர். அர்ஜூனன், 
3. திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. டி. ரத்தினவேல், 
4. விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர் ஆர்.                லட்சுமணன் 
5. கழக மாணவர் அணிச் செயலாளர் திரு. எஸ். சரவணபெருமாள் 
ஆகிய 5 பேர் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
0 comments